தன்னார்வ அமைப்பு, 2 பேர் மீது பா.ஜ.கவினர் மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார்
Virudhachalam King 24x7 |28 Dec 2024 5:29 PM GMT
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஜனநாயக மரபுப்படி கலந்துப்பேசி முடிவெடுக்கும் பண்புடைய பா.ஜ.க. வின் அகில இந்திய மற்றும் தமிழ்நாடு தலைமைகள் குறித்தும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்தும், எங்கள் கட்சியின் உரிமையில் தலையிட்டு எங்கள் தலைமை எடுக்கும் முடிவை குறை கூறி வரும், சம்பந்தமே இல்லாத தன்னார்வ அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்றும், இளையராஜா, அசோக் குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி, பா.ஜ.க., ஒன்றிய தலைவர் பரமசிவம் தலைமையில், பா.ஜ.கவினர், மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அப்போது, பாஜக பிரச்சாரப் பிரிவு மாநில செயலாளர் ராஜேந்திரன், பிறமொழிப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் தேவராஜ், விஸ்வநாதன், ஜெயக்குமார், செல்லமணிகண்டன், தமிழ்செல்வன், பிரகாஷ், பாலசந்தர் உட்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story