கடம்பூரில் பான் மசாலா கடத்தி வந்த 2 பேர் கைது
Bhavanisagar King 24x7 |1 Jan 2025 4:00 AM GMT
கடம்பூரில் பான் மசாலா கடத்தி வந்த 2 பேர் கைது
கடம்பூரில் பான் மசாலா கடத்தி வந்த 2 பேர் கைது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மாக்கம்பாளையம் செக்போஸ்ட் அருகே கடம்பூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தியதில் அவர்கள் வைத்திருந்த பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலாக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்தி விசாரணையில் பெருந்துறை, ஆயக்கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த மணி என்பவரது மகன் சரண்ராஜ் (32), அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (40) இருவரும் தெரியவந்தது. போதைப் பொருட்களை விற்பனைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து, 6 ஆயிரத்து இருநூற்று 26 ரூபாய் மதிப்புள்ள 6 கிலோ 670 கிராம் எடையுள்ள போதை பாக்கு, புகையிலை உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். சரண்ராஜ், சுரேஷ் இருவர் மீதும் கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story