குமரியில் கவர்னரை கண்டித்து 2 இடங்களில் ஆர்ப்பாட்டம்

குமரியில் கவர்னரை கண்டித்து 2 இடங்களில் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில்
தமிழக கவர்னரை காப்பாற்றும் பாரதிய ஜனதா, அதிமுக கட்சிகளை  கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று 7-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.      குமரி மாவட்டத்தில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும்,  மாநகராட்சி மேருமான மகேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கவர்னர் மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் சுரேஷ், முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன், மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட திமுக நிர்வாகிகள் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.        இது போன்று தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு குமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதிலும் ஏராளம் திமுகவினர் கலந்து கொண்டனர்.
Next Story