கடின உழைப்பும்,கவனத்தை சிதறாமல் வைத்திருந்தால் எதிர் காலத்தில் சிறந்தவர்களாக விளங்க முடியும்! +2 மாணவ மாணவிகளுக்கு நாமக்கல் கலெக்டர் உமா அட்வைஸ்
Namakkal King 24x7 |7 Jan 2025 11:38 AM GMT
புதிய தலைமுறை மற்றும் நாமக்கல் சி.எம்.எஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் சார்பில் வெற்றி படிகள் எனும் +2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதிய தலைமுறை மற்றும் நாமக்கல் சி.எம்.எஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் சார்பில் வெற்றி படிகள் எனும் +2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி எர்ணாபுரம் சி.எம்.எஸ் கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதிய தலைமுறை செயல் ஆசிரியர் திருப்பதி, சி.எம்.எஸ் கல்லூரி தாளாளர் முத்துசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பேசுகையில் ... +2 தேர்வு எழுதும் மாணவர்கள் கடின உழைப்பும், கவனத்தை சிதறாமல் வைத்திருந்தால் எதிர் காலத்தில் சிறந்தவர்களாக விளங்க முடியும், வெற்றி என்பது ஒவ்வொரு படியாக ஏறினால் நிச்சியமாக வெற்றி என்ற கனியை அடைய முடியும் என்றும், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என பேசினார். நிகழ்ச்சியில் புதிய தலைமுறை செயல் ஆசியர் திருப்பதி பேசுகையில்... +2 தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி தேர்வுக்கு தயாராக வேண்டும், +2 படிப்புக்கும் பின்பு பல்வேறு வாய்ப்புகள் குவிந்துகிடப்பதாகவும், மாணவர்கள் தங்களுக்கு ஏற்ற துறையை தேர்வு செய்து தொடர்ந்து முயற்சித்தால் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருண் பேசுகையில் .... மாணவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள், சாப்பிட வேண்டிய உணவுகள், தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் குறித்து எடுத்துரைத்தார்.மேலும் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் உள்ளிட்ட பாடங்களை சார்ந்த வல்லுநர்கள் தேர்வினை எவ்வாறு கையாள்வது என எடுத்துரைத்தனர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் நம்பிக்கையுடன் பொது தேர்வை எதிர் கொள்ள வழிகாட்டும் விதமாக நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2000க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Next Story