விழுப்புரம் அருகே பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் குண்டாசில் கைது
Villuppuram King 24x7 |11 Jan 2025 3:50 AM GMT
பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் குண்டாசில் கைது
விழுப்புரம் மாவட்டம், சித்தலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமன், 50; கடந்த டிச.8ம் தேதி, இரவு இவரது வீட்டின் முன் அதே கிராமத்தை சேர்ந்த ஆசிக், சுனில் ஆகியோர், முன் விரோதம் காரணமாக புதுச்சேரி ஆட்டுப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சுனில் கிஷோர்குமார்,25; விக்கிரவாண்டி அடுத்த மதுரப்பாக்கத்தை சேர்ந்த வரதராஜ் மகன் கணேஷ்ராஜ், 25; ஆகியோரை அழைத்து சென்று பெட்ரோல் குண்டை வீசினர்.இதுகுறித்து ராமன் கொடுத்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து சுனில் உள்ளிட்டோரை கைது செய்தனர்.இந்நிலையில், இவர்களது குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், எஸ்.பி., சரவணன் பரிந்துரையை ஏற்று, சுனில்கிஷோர்குமார், கணேஷ்ராஜ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதனையொட்டி, இருவரும் நேற்று கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story