திறந்த 2 நாளில் பூட்டிய அரசு அங்கன்வாடி மையம் 

திறந்த 2 நாளில் பூட்டிய அரசு அங்கன்வாடி மையம் 
X
புதுக்கடை
குமரி மாவட்டம் புதுக்கடை அருகேயுள்ள தும்பாலி, பொற்றவிளை பகுதியில் கடந்த 2003 - 2004-ம்  ஆண்டு மார்ச் மாதம் தும்பாலி அங்கன்வாடி மையம் எண் -102 துவங்கப்பட்டது.      அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட 2022- 2023-ம் ஆண்டு பொற்றவிளை பகுதியில் ஒரு படிப்பகம்  இருந்த இடத்தில் அரசு அங்கன்வாடி கட்டிடம் கட்ட அதன் நிர்வாகிகளிடம் விளாத்துறை ஊராட்சி சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து நிலத்தின் உரிமையாளர் அரசிற்கு நிலம்  வழங்க சம்மதித்தார்.        அதன் பின்னர் அங்கிருந்த படிப்பக கட்டிடத்தை அகற்றி விட்டு, அண்ணா மறுமலர்ச்சி திட்டம்  ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடம்  அமைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி விளாத்துறை ஊராட்சி தலைவர், திமுக ஒன்றிய செயலாளர் , துறை அதிகாரிகளால்  திறக்கப்பட்டது.        அதன் பிறகு 2 நாட்கள் அரசின் புதிய கட்டிடத்தில் குழந்தைகளுடன் புதிய  மையம் செயல்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின் சிலரின் தூண்டுதலால்  புதிய கட்டிடத்தில் மையம் செயல்பட விடாமல் தடுப்பதுடன்,  மேலும் அரசு ஆவணங்களையும், பொருட்களையும் பழைய கட்டிடத்தில் இருந்து எடுக்க விடாமல் தடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.        அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் அரசு நிதியில் அமைக்கப்பட்ட தும்பாலி அங்கன்வாடி மையம் அரசால் அமைக்கப்பட்ட  புதிய கட்டிடத்தில்  தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story