ஜெயங்கொண்டம் தியேட்டரில் திரை சிலையை கிழித்த 2 பேர் கைது

ஜெயங்கொண்டம் தியேட்டரில் திரை சிலையை கிழித்த 2 பேர் கைது
X
ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் தியேட்டரில் மது போதையில் சண்டை போட்டுக் கொண்டு செல்போனை விட்டெறிந்து திரை சிலையை கிழித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்..
அரியலூர் ஜன.17- ஜெயங்கொண்டம் தனியார் திரையரங்கில் இரவுக் காட்சியில் தகராறு செய்து கொண்டு தியேட்டர் திரைச்சீலையை கிழித்த இருவரை போலீசார் கைது செய்தனர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் திரையரங்கு ஒன்றில் நேற்று முன்தினம் இரவு இரவு காட்சியின் இப்போது அங்கு படம் பார்த்துக் கொண்டிருந்த இருவர் ஒருவருக்கொருவர் தகராறு செய்து திட்டி தாக்கிக்கொண்டு செல்போன் தூக்கி படம் ஓடிக் கொண்டிருந்த நிலையில் திரைச்சீலை மீது வீசி எறிந்ததில் திரைச்சீலை கிழிந்தது. உடனடியாக அங்கு பணியில் இருந்த மேலாளர் ஜமீன் மேலூரை சேர்ந்த நாராயணசாமி (51) என்பவர் அந்த இருவர் மீதும் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் செல்போனை தூக்கி எறிந்து கிழித்து தகராறு செய்து கொண்டிருந்த ஜெயங்கொண்டம் அடிபள்ளதெரு சேகர் மகன் பிரபு (24) அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் இளவரசன் (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சாரணை செய்து வருகின்றனர்
Next Story