வங்குடியில் விஜிலென்ஸ் ரைடு ரூ 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

X
அரியலூர், ஜன.28 - அரியலூர் மாவட்டம் அய்யப்பன் நாயக்கன் பேட்டை கிராமம் கீழத் தெருவை சேர்ந்த கோதண்டபாணி மகன் வேல்முருகன் (47) இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.இவருக்கு நில அளவை செய்ய வேண்டி பலமுறை கிராம நிர்வாக அலுவலரிடம் அணுகியுள்ளார். பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் ரூபாய் 2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது லஞ்சம் கொடுக்க விரும்பாத வேல்முருகன் இது குறித்து அரியலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் செய்தார் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஏலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் மகனும் வங்குடி விஏஓ வுமான புகழேந்தியிடம் (54) வேல்முருகன் கொடுக்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் புகழேந்தியை கையும் களவுமாக கைது செய்தனர். இதனையடுத்து அரியலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்ப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையிலான போலிசார் விசாரணை நடத்தினர் இதில் லஞ்சமாக பெற்றது உறுதியானது இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ புகழேந்தியிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story

