மத்தூர் அருகே டிராக்டர்களில் பேட்டரி திருடிய 2 பேருக்கு காப்பு.

மத்தூர் அருகே டிராக்டர்களில்  பேட்டரி திருடிய 2 பேருக்கு காப்பு.
X
மத்தூர் அருகே டிராக்டர்களில் பேட்டரி திருடிய 2 பேருக்கு காப்பு.
கிருஷ்ணகிரி மவட்டம் மத்தூரை அடுத்த சின்னஆலர அள்ளியை சேர்ந்தவர் ராஜா (50). விவசாயியான இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவருடைய வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கபட்டிருந்த இரண்டு டிராக்டர்களில் இருந்த பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து அவர் மத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் போச்சம்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த காளிமுத்து (35), களர்பதியை சேர்ந்த பிரபாகரன் (35) ஆகிய 2 பேர் பேட்டரி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து அவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.
Next Story