கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது : போலீசார் அதிரடி
அம்பத்தூர் அடுத்த பற்றவாக்கம் ரயில் நிலையம் அருகே 18கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 நபரை அம்பத்தூர் மதுவிலக்கு உதவி ஆய்வாளர் கைது செய்து சிறையில் அடைத்தனர் சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர் அடுத்த பற்றவாக்கம் பகுதியில் கஞ்சா கடத்தி வருவதாக அம்பத்தூர் மதுவிலக்கு உதவி ஆய்வாளர் சீதாலட்சுமி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அம்பத்தூர் அடுத்த பட்டறை வாக்கம் இரயில் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபொழுது சந்தேகத்திற்கிடமான அவர்கள் சுற்றி திரிவதை கண்ட காவல்துறையினர் அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் பெயர் இளமை சிவா மதுரை மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் மற்றொருவர் இருளப்பன் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது அவர்கள் வைத்திருந்த கைப்பையில் 9 கிலோ9 கிலோ கஞ்சா இருந்ததை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் அம்பத்தூர் பட்டறை வாக்கம் கொரட்டூர் அம்பத்தூர் தொழில் பேட்டை சுற்றுப்பகுதியில் வட மாநிலத்தவர் கூலித் தொழிலாளிகளுக்கு மொத்தமாக கஞ்சா கடத்தி வந்து சில்லறையில் விற்பனை செய்தது தெரிய வந்தது பின்பு அவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் இந்த தீவிர கண்காணிப்பில் உதவி ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் மதுவிலக்கு காவலர்கள் உடன் இருந்தனர்
Next Story




