கத்தியை காட்டி பணம் பறித்த 2 ரவுடிகள் கைது

X

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் கத்தியை காட்டி பயணிகளிடம் பணம் பறித்த 2 ரவுடிகள் கைது
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பட்டா கத்தியுடன் பயணிகளிடம் 2 வாலிபர்கள் பணம் கேட்கும் மிரட்டினர். இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் அருண்பிரசாத் மற்றும் காவலர்கள் பட்டாகத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு போது அவர்கள் திண்டுக்கல், GTN- கல்லூரி பின்புறம் உள்ள AD-காலனியை சேர்ந்த சங்கர்குமார்(23), ஈஸ்வரன்(22) என்ன தெரிய வந்தது இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story