சாலையின் குறுக்கே வந்ததால் கார் மோதி மனநலம் பாதித்தவர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

X
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வேலாயுதசாமி கோயில் தெருவில் ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் அருகே பிடாரிசேரியைச் சேர்ந்த நாகராஜன்(65) வசித்து வந்தார். வேலாயுதசாமி கோயில் தைப்பூச திருவிழாவுக்காக தனது சொந்த ஊரில் இருந்து உறவினர்களை காரில் அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே புறவழிச்சாலையில் கார் வந்தபோது, 40 வயதுள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர் குறுக்கே வந்துள்ளார். அவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் இருந்த நாகராஜனும் உயிரிழந்தார். விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story

