கந்தம்பாளையம் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த 2 பேர் கைது.

X
Paramathi Velur King 24x7 |12 Feb 2025 5:54 PM ISTகந்தம்பாளையம் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த 2 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
பரமத்தி வேலூர், பிப்.12: கந்தம்பாளையம் அருகே பெரியசூரம்பாளை யத்தில் சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் 2 பேர் அங்கிருந்து ஓட முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். அவர்களிடம் இருந்த 2 பிளாஸ்டிக் கவர்களில் 10 போதை மாத்திரைகள் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நடந்தை நாடார் தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் கூலித் தொழிலாளி பிரபு (23), பெரியசூரம் பாளையத்தை சேர்ந்த குபேந்திரன் மகன் டிரைவர் கார்த்திகேயன் (26) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து பரமத்தி குற்ற வியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பரமத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story
