தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு

X
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தகட்டூர் நடுக்காடு பகுதியில் வசிப்பவர் கணேசன் ( 70 ). கூலித் தொழிலாளி. அவரது வீட்டின் அருகில் மகள் முத்துலட்சுமி (45). கூரை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், மின் கசிவின் காரணமாக திடீரென கணேசனின் கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. இதனை அடுத்து அருகில் உள்ள அவரது மகள் முத்துலட்சுமியின் வீடும் தீப்பற்றி எரிய தொடங்கியது. மேலும், அருகில் உள்ள இரண்டு மாட்டு கொட்டகைகளும் சேர்ந்து 4 கூரை கொட்டகைகளும் தீப்பற்றி எரிந்தன. உடனடியாக அருகில் இருந்தவர்கள், வாய்மேட்டில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதை எடுத்து, தீயணைப்பு துறை வருவதற்குள் 4 கூரை கொட்டகைகளும் தீயில் முழுவதுமாக எரிந்தது. 2 வீட்டில் இருந்த சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தது. அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் இருப்பதற்காக, தீயனைப்பு துறையினர் பாதுகாத்து தீயை அணைத்தனர்.தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 2 குடும்பத்திற்கும் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது. வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயம் முருகையன் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள், புத்தாடைகள் மற்றும் நிதி உதவியை வழங்கினார். திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, திமுக மாவட்ட பிரதிநிதி வீரமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகுரு மற்றும் கிளை கழக செயலாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story

