குமரியில் 2 நாட்கள் டாரஸ் லாரிகளை தடை செய்ய கோரிக்கை

X
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநக விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் நாஞ்சில் ராஜா தலைமையில் நிர்வாகிகள் குமரி மாவட்ட எஸ்பி யிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- இந்துக்களின் முக்கிய பண்டிகையான மகா சிவராத்திரி விழா வருகிற 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் வரும் 25ஆம் தேதி தொடங்க இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானவர்கள் இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கு இருக்கிறார்கள். முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவில் தொடங்கி 12 சிவாலயங்களில் சென்று இந்த ஓட்டம் நிறைவடையும். குமரி மாவட்டத்தை பொறுத்தவரை டாரஸ் லாரிகளால் அதிக விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக குமரி மேற்கு மாவட்ட பகுதியில் விபத்துகளும் உயிர்பலிகளும் தொடர்கதையாக நிகழ்ந்து வருகின்றன. சிவாலய ஓட்ட கோயில் அனைத்தும் குமரி மாவட்ட மேற்கு மாவட்ட பகுதிகளில் தான் அமைந்திருக்கிறது. எனவே சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நலன் கருதி வருகிற 25 மற்றும் 26 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் குமரி மாவட்டத்தில் முழுமையாக டாரஸ் லாரிகளை தடை செய்ய வேண்டும். என்று மனுவில் கூறியுள்ளனர்.
Next Story

