காரில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

X
தென்காசி மாவட்டம், புளியறையில் காவல் ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா் சுபாஷ்ச ந்திரபோஸ் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது காவல்துறையினரின் சோதனை நடவடிக்கையை கண்டு திரும்பிச் செல்ல முயன்ற காரை வழிமறித்து சோதனை மேற்கொண்டனா்.அந்தக் காரில் இருக்கைக்கு கீழே 2கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், காரில் வந்தவா்கள் திருநெல்வேலி ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த தினேஷ் மற்றும் புளியறை பகவதிபுரத்தை சோ்ந்த ரவிராஜ வா்மன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து பறிமுதல் செய்தனா்.
Next Story

