சிறுதானிய வியாபாரியிடம் ரூ.2 லட்சம் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

X
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன்(70). இவர் சிறுதானியம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று நண்பகலில் தனியார் வங்கிக்கு சென்று ரூ.2 லட்சத்தை எடுத்துக் கொண்டு, அதை ஒரு பையில் வைத்து, தனது மொபெட்டின் முன் பகுதியில் வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஊருக்கு சென்றபோது, அவரை வழிமறித்த 3 பேர் அவரது சட்டையில் சேறு இருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவர் தனது மொபெட்டை நிறுத்திவிட்டு, அருகிலுள்ள கடைக்கு சென்று, தண்ணீர் பாட்டில் வாங்கி, தனது சட்டையை சுத்தம் செய்துள்ளார்.பின்னர் மொபெட்டுக்கு வந்தபோது, அதில் வைத்திருந்த பணப் பையை காணவில்லையாம். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் விளாத்திகுளம் போலீசார் வழக்குப் பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Next Story

