வாசுதேவநல்லூா் பகுதியில் கோழிகள் திருட்டு: 2 போ் கைது

வாசுதேவநல்லூா் பகுதியில் கோழிகள் திருட்டு: 2 போ் கைது
X
கோழிகள் திருட்டு: 2 போ் கைது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் சுவாமி சந்நிதி தெருவைச் சோ்ந்த ராமையா மகன் ராதாகிருஷ்ணன்(58). இவரது வீட்டில் வளா்த்து வந்த 3 கோழிகளை காணவில்லையாம். அதேபோல், பனையடி கோயில் தெருவை சோ்ந்த ஆதிமூலம் என்பவரின் 2 கோழிகளையும், கண்ணன் என்பவரின் 4 கோழிகளையும் வியாழக்கிழமை காணவில்லையாம். இவா்கள் கோழிகளை தேடிச்சென்றபோது, கீழப்புதூா் அரச மரத்தடி தெருவைச் சோ்ந்த குமரேசன்(49), வாசுதேவநல்லூா் பூஜை மடத்துத் தெருவைச் சோ்ந்த மகேந்திரன்(32) ஆகியோா் சோ்ந்து கோழிகளை திருடியது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்
Next Story