சத்தியமங்கலம் அருகே கத்திமுனையில் லாரி கிளீனரிடம் பணம் பறிப்பு 2 பேர் கைது

சத்தியமங்கலம் அருகே கத்திமுனையில் லாரி கிளீனரிடம் பணம் பறிப்பு 2 பேர் கைது
X
சத்தியமங்கலம் அருகே கத்திமுனையில் லாரி கிளீனரிடம் பணம் பறிப்பு 2 பேர் கைது
சத்தியமங்கலம் அருகே கத்திமுனையில் லாரி கிளீனரிடம் பணம் பறிப்பு 2 பேர் கைது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 39). லாரி கிளீனர். இவர் நேற்று முன்தினம் இரவு சம்ப ளம் வாங்கிக்கொண்டு ஊருக்கு வருவதற்காக பண் ணாரி தெப்பக்குளம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வெங்கடேஸ்வரனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு உள்ளனர். இதனால் பயந்து போன அவர் தன்னிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை கொடுத்து உள்ளார். பணத்தை பறித்த 2 பேரும் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது. வெங்கடேஸ்வரன் திருடன், திருடன் என சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று அந்த 2 பேரையும் பிடித்து பண்ணாரி சோதனைச்சாடியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் கள் 2 பேரும் சத்தியமங்கலம் போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டனர். பிடிபட்டவர்களிடம் சத்தியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் சத்தியமங்கலம் அருகே கொமராபாளையத்தை சேர்ந்த பிர பாகரன் (20), சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையை சேர்ந்த வடிவேல் (29)' என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story