ஸ்ரீரங்கத்தில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஸ்ரீரங்கத்தில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X
தொடர் குற்ற சம்பவங் களில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர்கள் என்பதால் நடவடிக்கை
சென்னை ராயபுரம் காசிமேட்டை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 23). இவர் மீது ஸ்ரீரங்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருவானைக்காவலை சேர்ந்த ரகு என்கிற ரகுபதி (22) மீதும் வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் தொடர் குற்ற சம்பவங் களில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர்கள் என்பதால், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க ஸ்ரீரங்கம் போலீ சார், மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் காமினி உத் தரவிட்டார். இந்த உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறையில் இருந்த லோகேஷ், ரகுபதி ஆகியோரிடம் நேற்று வழங்கப்பட்டது.
Next Story