காங்கேயம் அருகே மாரியம்மன் சாமி மீது 2 நாட்களாக உள்ள பாம்பு - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

X
காங்கேயம் அடுத்துள்ள பரஞ்சேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா துவங்கி உள்ளது. இதனால் கிராம பகுதிகளில் இருந்து தினசரி பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் கோவிலில் உள்ள கருவறையில் மாரியம்மன் சாமியின் சிலை மீது சுமார் 3 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு குடிகொண்டுள்ளது. பூஜை செய்ய சென்ற பூசாரி இதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக ஊர் பொதுமக்களிடம் தெரிவித்து உள்ளார். இதை அடுத்து ஊர் பொதுமக்கள் சென்று பார்த்தபோது மாரியம்மன் சாமி சிலையின் சிலைக்குள் அமைதியாக படுத்து உறங்கிக் கொண்டுள்ளது. மேலும் சாமிக்கு தீபாராதனை செய்யும் பொழுது சிலையை சுற்றி சுற்றி வருகின்றது.பூஜை செய்பவர்களை அச்சுறுத்தவோ கொத்தவோ செய்யவில்லை ஆனால் பாம்பு விடும் இஸ் இஸ் சத்தம் மட்டும் அனைவரையும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.
Next Story

