சேலத்தில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

X
சேலம் சிவதாபுரம் பகுதியில் கொண்டலாம்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அங்குள்ள கால்நடை மருத்துவமனை அருகில் சிவதாபுரத்தை சேர்ந்த கோபால் (வயது30), மெய்யன் தெருவை சேர்ந்த சக்திவேல் (42) ஆகியோர் லாட்டரி சீட்டு விற்றதாக கூறப்படுகிறது. இதை நோட்டமிட்ட போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story

