ராணிப்பேட்டை:குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

X
அணைக்கட்டு தாலுகா ராஜபாளையம் ஊசூர் கிராமத்தை சேர்ந்தவர் யஷ்வந்த் (வயது23,) ஒடுகத்தூர் மடையம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (24). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர்ளை சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களது குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா பரிந்துரை செய்தார்.அதன்படி இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story

