வாலிபருடன் சேர்ந்து தொழிலாளியை தாக்கிய 2 பெண்கள்

X
குமரி மாவட்டம் திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (36). பிளக்ஸ் போர்டு அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தி, நிஷாந்தி, மகேஷ், சாம்சன் ராகுல் ஆகியோருக்கும் கேலி கிண்டல் செய்தது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் உண்டு. இந்த நிலையில் நேற்று பகலில் ராஜேஷ் கல்லுதொட்டி என்ற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆனந்தி, மகேஷ், நிஷாந்தி ஆகியோர் வழிமறித்து தகராறு செய்து, ஆனந்தி ஏற்கனவே தான் மறைத்து வைத்திருந்த இரும்பு வளையத்தால் ராஜேஷ் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் நிலை குலைந்த நிலையில் மகேஷ், நிஷாந்தி ஆகியோர் சேர்ந்து கம்பால் ராஜேஷ் தலையில் அடித்தனர். இதில் காயமடைந்த ராஜேஷ் அலறினார். அப்போது சாம்சன் ராகுலை செல்போனில் அழைத்து, ராேஜேஷிடம் பேச வற்புறுத்தினர். செல்போனை வாங்கி பேசிய போது எதிர்மறையில் பேசிய சாம்சன் ராகுல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் மூன்று பேர் கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த ராஜேஷ் மார்த்தாண்டத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து புகார் என்பேரில் ஆனந்தி, மகேஷ், நிஷாந்தி மற்றும் சாம்சன் ராகுல் ஆகியோர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

