தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது 2-வது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்தது

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது 2-வது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்தது
X
போலீஸ் கமிஷனர் நடவடிக்கை
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் சந்தோஷ்குமார் (வயது 23). இவர் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவரை மிரட்டி ரூ.1,200 பறித்துக்கொண்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபடும் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவரை பற்றி விசாரணை நடத்திய போது தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை 2-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யும் படி, துணை கமிஷனர் பிருந்தா பரிந்துரை செய்தார். இதையடுத்து சந்தோஷ் குமாரை, 2-வது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை, சிறையில் உள்ள சந்தோஷ்குமாரிடம் போலீசார் வழங்கினர்.
Next Story