சேலத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

X
சேலம் அஸ்தம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் முள்ளுவாடி கேட் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த மணக்காட்டை சேர்ந்த வசந்தகுமார் (25), மகபூப்பாஷா (28) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story

