பன்றி பண்ணை உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது 

செண்பகராமன் புதூர்
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன் புதூர் அகஸ்தியர் காலனி பகுதியை சேர்ந்த மதுரை வீரன் (39) என்பவர் ஆரல்வாய்மொழி  காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், ._ சமத்துவபுரம் பகுதியில் பன்றி பண்ணை நடத்தி வருவதாகவும், கடந்த 19ஆம் தேதி இரவு ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த சகாயம் (25) மற்றும் ஜோசலின் டென்னிஸ் (25) ஆகியோர் வந்து 5 பன்றி குட்டிகளை பண்ணையில் விட்டு விட்டு அதை பார்த்துக் கொள்ளுமாறு கூறி சென்றுள்ளனர்.      அவர்கள் சென்ற சிறிது  நேரத்தில் பன்றி குட்டிகள் தன்னுடையது என கூறி மற்றொருவர் வந்து வாங்கி சென்று விட்டார். அதற்கு பின்  மீண்டும் பண்ணைக்கு வந்த சகாயம், ஜோசலின் டென்னிஸ் ஆகியோர் பன்றி குட்டிகளை எப்படி மற்றவரிடம் கொடுக்கலாம் என கேட்டு மதுரை வீரனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் கொடுத்துவிட்டு சென்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சகாயம், ஜோசலின் டென்னிஸ் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
Next Story