உதகையில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறுகிய காலத்தில் உயிர் காக்கும் மருந்துகளை கண்டு பிடிப்பது குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கு

உதகையில் நடைபெற்ற  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறுகிய காலத்தில் உயிர் காக்கும் மருந்துகளை கண்டு பிடிப்பது குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கு
X
உதகையில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறுகிய காலத்தில் உயிர் காக்கும் மருந்துகளை கண்டு பிடிப்பது குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கு
உதகையில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறுகிய காலத்தில் உயிர் காக்கும் மருந்துகளை கண்டு பிடிப்பது குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கில் இந்தியா பார்மசி கவுன்சில் முன்னாள் தலைவரும், JSS பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்......................... ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல்கல்லூரியில்  மருந்து வேதியியல் துறையின் சார்பில்  இரண்டு நாள் சரவதேச கருத்தரங்கம் தொடங்கியது. இதில் நாடுமுழுவதிலும் இருந்து சுமார் 22  மாநிலங்களல் இருந்து 1200 ஆராய்சியாளர்கள் மாணவ, மாணவிகள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இதல் 750 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பிக்கபட்டன இந்நாள் வரை ஒரு புதிய மருத்தை கண்டுபிடிக்க 2 பில்லின் அமெரிக்க டாலர் செலவில் சுமார் 10 ஆண்டுகள் ஆன நிலையில் AI தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் 6 மாதம் முதல் ஒரு வருடத்திற்குள்ளேயே புதிய மருந்துகளை கண்டு பிடிக்க முடியும் என்றும் புற்றுநோய், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற வாழ்நாள் நோய்களில் இருந்து விடுதலை பெற அளவில் மருந்துகளை கண்டுபிடிக்க முடியும் என்றும் மூத்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கருத்தரங்கில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும், இந்தியவில் உள்ள அனைத்து பார்மசி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் என 1200 பேர் கலந்துகொண்டுள்ளனர். இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கருத்தரங்கில் மருந்தாக்கில் துறையில்செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய மருந்துகளை கண்டுபிடிப்பது, செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தில் மருந்தாக்கில் கல்வியை உருவாக்குவது, பார்மசி படிப்பை முடித்தவர்கள் எவ்வாறு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருந்துகளை வழங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆலோசிக்கப்பட உள்ளது. சர்வதேச கருத்தரங்கை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியா பார்மசி கவுன்சில் முன்னாள் தலைவரும், JSS பல்கலைக்கழக துணைவேந்தருமான டாக்டர் சுரேஷ்: தற்போது ஏஐ தொழில்நுட்பம் வேளாண்மை பொறியியல் விண்வெளி உள்ளிட்ட துறைகளில் முக்கிய பங்கு வகிது வருவதாகவும் இந்த ஏ ஐ தொழில்நுட்பம் மூலம் வேலை வாய்ப்பு குறையாது என்று கூறினார். தற்போது உள்ள தொழில் நுட்பத்துடன் எவ்வாறு ஏ ஐ பயன்படுத்தி பார்மசி கல்விகள் ஏற்படுத்துவது படிப்பு முடித்தவர்கள் எவ்வாறு ஆராய்ச்சியை பயன்படுத்தி மருந்துகளை உற்பத்தி செய்வது புதிய மருந்துகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வது குறித்து இந்த சர்வதேச கருத்தரங்கில் விவாதிக்கப்படும் என்றும் வழக்கமாக புதிதாக ஒரு மருந்தை கண்டுபிடிக்க பத்து ஆண்டுகள் ஆகும் என்றும் அதற்காக இரண்டு பில்லியன் அமெரிக்கா டாலர் செலவு ஆவதாகவும் ஆனால் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இனி வரும் காலங்களில் குறைந்த செலவில் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்குள் புதிய மருந்துகளை கண்டுபிடிக்க முடியும் என்றார். மேலும் நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் குறித்தும் அவற்றின் ஜீன்களின் தன்மை ஏற்ப அதற்கான தனித்தனியாக மருந்துகளை வழங்க முடியும் என்றும் கேன்சர், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற வாழ்நாள் நோய்களுக்கு தற்போது உள்ள தொழில்நுட்பத்துடன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விடுதலை கிடைக்கும் விதமான மருந்துகளை கண்டுபிடிக்க முடியும் என்றும் மருந்தாக்கியல் துறையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது மனிதர்களுக்கு எதிர்பார்க்காத அளவு பயன் கிடைக்கும் என்றார். குறிப்பாக தற்போதுள்ள சூப்பர் பக் என்ற நோய் தொற்று பெரும்பாலான மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடிவதில்லை என்று கூறிய சுரேஷ் ஏ ஐ தொழில் நுட்பம் மூலம் சூப்பர் பக் போன்ற நோய் தொற்றுகளை கூட கட்டுப்படுத்தும் மருந்துகளை எளிதாக கண்டறிய முடியும் என்றும் தெரிவித்தார்.
Next Story