நித்திரவிளையில் வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது

X

கன்னியாகுமரி
குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் கடந்த மாதம் 10-ம் தேதி அலெக்ஸ் என்பவர் வீட்டின் முன்பக்க கதவு உடைத்து திருட்டு முயற்சி நடந்தது. 12ஆம் தேதி நம்பாளி பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவரின் வீட்டின் முன்பக்க கதவு உடைத்து உள்ளே புகுந்து 7 பவுன் நகைகள் மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதன் பின்னர் 23ஆம் தேதி பூந்தோப்பு காலனி பகுதியில் பட்டப் பகலில் பைக்கில் வந்த இரண்டு பேர் பிரதாப் என்பவரின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து 18 பவுன் நகைகளை திருடி சென்றனர். தொடர்ந்து நடந்த இந்த திருட்டு சம்பவங்கள் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நித்திரவிளை போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். இதில் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (39), சுஜித் ( 27) ஆகிய இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். இதை அடுத்து பிரதாப் மற்றும் இருவர் வீடுகளிலிருந்து திருட்டுப் போன சுமார் 12 பவன் தான் தங்க நகைகளை போலீசார் மீட்டு அவர்களை கைது செய்தனர். இந்த நிலையில் இன்று 12-ம் தேதி காலையில் போலீஸ் நிலைய கழிவறையில் இருந்து வெளியே வந்த போது சுஜித் என்பவர் தவறி விழுந்ததில் அவர் வலது கை முறிந்தது. தொடர்ந்து ரெண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story