சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
X
போலீசார் நடவடிக்கை
சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 4-வது பிளாட்பாரத்தில் ஒரு 'பை' கேட்பாரற்று கிடந்தது. அதை பிரித்து பார்த்த போது அதில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 2 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து, கஞ்சாவை கடத்தி வந்து, ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் வீசிச்சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story