நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு மிரட்டல் 2 பேர் கைது

X

தக்கலை
குமரி மாவட்டம் சித்ரங்கோடு பகுதியை சேர்ந்தவர் விஜூ ( 40). இவர் நாம் தமிழர் கட்சி மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்து வருகிறார். மாற்றுத்திறனாளி ஆன இவர் குமரி மாவட்டத்தில் கல்குவாரிகளில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக புகார் கூறிவந்துள்ளார். இந்த நிலையில் தனி தடிக்காரன்கோணம் சிஎம்எஸ் ஏரியாவை சேர்ந்த ஜெபராஜ் (37) என்பவர் 3 டிப்பர் வாகனங்களில் வைத்து கல் குவாரியிலிருந்து மண், ஜல்லி போன்றவை ஆர்டரின் பெயரில் கொடுத்து வருகின்ற தொழில் செய்து வருகிறார். இந்த தலையில் விஜுவின் செயல்பாடுகளால் தனது தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருமோ என்ற அச்சத்தில் கடந்த 8- ம் தேதி ஜெபராஜ் மற்றும் சுருளோடு பகுதியை சேர்ந்த அஜின் (24)ஆகியோர் பைக்கில் விஜு வீட்டிற்கு சென்று உள்ளனர். மேலும் கல்குவாரிக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருந்தால் உன்னை கொல்லாமல் விடமாட்டோம் என்று மிரட்டியுள்ளனர். இது குறித்து விஜு கொற்றி கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜெபராஜ், அஜின் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
Next Story