ஆரணி அருகே அரிசி ஆலையில் பணிபுரியும் ஊழியர் வீட்டில் நகை, பணம் திருடிய 2 வாலிபர்கள் கைது.

ஆரணி, மார்ச் 15. ஆரணி அடுத்த இ.பி.நகர் பகுதியில் அரிசி ஆலையில் பணிபுரியும் ஊழியர் வீட்டில் சவரன் நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவை வியாழ்ககிழமை நள்ளிரவில் திருடிச்சென்று ஒரே நாளில் நகை திருடிய ஆசாமிகளை ஆரணி கிராமிய போலீஸார் பிடித்து கைது செய்தனர்
ஆரணி. ஆரணி அடுத்த இ.பி.நகர் பகுதியில் அரிசி ஆலையில் பணிபுரியும் ஊழியர் வீட்டில் சவரன் நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவை வியாழ்ககிழமை நள்ளிரவில் திருடிச்சென்று ஒரே நாளில் நகை திருடிய ஆசாமிகளை ஆரணி கிராமிய போலீஸார் பிடித்து கைது செய்தனர். ஆரணி அடுத்த இ.பி.நகர் குமரன் தெருவை சேர்ந்த அரிசி ஆலை ஊழியர் தங்கராஜ்(36) என்பவர் குடும்பத்துடன் வியாழக்கிழமை இரவு திருவண்ணாமலைக்கு சென்று வெள்ளிக்கிழமை காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 15 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ஆகியவை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் தங்கராஜ் வெள்ளிக்கிழமை புகார் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்குசென்ற ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி, இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, எஸ்.ஐ அருண்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி தலைமையில். இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, எஸ்.ஐக்கள் சுந்தரேசன்,அருண்குமார், போலீஸார்கள் கன்ராயன், சங்கர், வாகித், ஏழுமலை, முருகன், அருணகிரி, பட்டுசாமி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை தனிப்படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது ஆரணி பெரியார் நகரில் மொபட்டில் டிவியை வைத்து தள்ளிச்சென்றுகொண்டிருந்த 2 பேரை போலீஸார் விசாரணை செய்ததில் முன்னுக்கு பின்னாக பதில் கூறினர். இதனால் ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் அழைத்துச்செல்லப்பட்டு விசாரணை செய்தனர். விசாரணையில் குடியாத்தம் தாலுக்கா சாத்கர் கிராமத்தைச் சேர்ந்த சந்தானம் மகன் எஸ்.ரமேஷ்(44), ஆரணி பெரியார் நகர் சேர்ந்த மொழி மகன் எம்.சந்தோஷ்(33) என தெரியவந்தது. இருவரும் உறவினர் ஆவர். மேலும் ஆரணி அடுத்த இ.பி.நகரில் நகைகளை திருடியவர்கள் என்றும் தெரியவந்தது. இதனால் போலீஸார் இருவரையும் கைது செய்து தங்க நகைகள் 15 சவரன், 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் டிவி. லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் பயன்படுத்திய மொபட்டையும் பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி தலைமையிலான தனிப்படையினர் நகைகளை திருடிய 2 நபர்களை கைது செய்தது குறித்து திருவண்ணாமலை எஸ்.பி பாராட்டினார்.
Next Story