வாணியம்பாடி அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் 2 சவரன் பறிப்பு

வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் மூதாட்டியிடம் தங்க செயினை பத்திரமாக வைத்துக் நூதன முறையில் 2 சவரன் தங்க செயினை ஏமாற்றி எடுத்துச்சென்ற பெண்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் மூதாட்டியிடம் தங்க செயினை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என கூறி நூதன முறையில் 2 சவரன் தங்க செயினை ஏமாற்றி எடுத்துச்சென்ற பெண் மூதாட்டியின் புகாரின் பேரில் வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி என்ற மூதாட்டி இவர் இன்று, கணவாய்புதூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று பின்னர் வீடு திரும்பிய போது, வாணியம்பாடியில் உள்ள வாரச்சந்தையில் காய்கறி வாங்குவதற்காக வந்துள்ளார், அப்பொழுது இன்று சனிக்கிழமையென்பதால் வாரச்சந்தையில் அதிக அளவு கூட்டம் இருந்ததால், மூதாட்டி லட்சுமி தான் அணிந்திருந்த 2 சவரன் தங்க செயினை பத்திரபடுத்துவதற்காக தங்கசெயினை கையில் வைத்துள்ளார், அப்பொழுது, இதனை நோட்டமிட்ட பெண் ஒருவர், மூதாட்டி லட்சுமியிடம் சென்று தங்க செயினை புடவை முந்தானையில் வைத்து கட்டிக்கொள்ளுங்கள் எனவும், அதற்கு தான் உதவி செய்வதாக நம்பும்படி கூறி லட்சுமியிடம் இருந்து 2 சவரன் தங்க செயினை வாங்கிக்கொண்டு, தான் வைத்திருந்த கவரிங் நகையை மூதாட்டி லட்சுமியின் புடவை முந்தானையில் வைத்துள்ளார், அதனை தொடர்ந்து சிறிது நேரத்திற்கு பிறகு தங்க செயினை பார்த்த போது, அது போலியான கவரிங் நகை என்பது மூதாட்டி லட்சுமியிற்கு தெரியவந்ததையடுத்து, உடனடியாக இதுகுறித்து மூதாட்டி லட்சுமி, வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார், புகாரின் பேரில் இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, மூதாட்டி லட்சுமியிடம் நூதன முறையில் 2 சவரன் தங்கசெயினை பறித்துச்சென்ற பெண் குறித்து தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.. மேலும், காய்கறி வாங்க வந்த மூதாட்டியிடம் நூதன முறையில் 2 சவரன் தங்கசெயின் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story