தொழிலாளியை பீர்பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது

தொழிலாளியை பீர்பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் அருகே வீராணம் குப்பனூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 54), கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 2 பேர் வந்தனர். அவர்களிடம் ஏன் இரவு நேரத்தில் இங்கு சுற்றித்திரிகிறீர்கள்? என முருகேசன் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பீர்பாட்டிலால் தாக்கினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் முருகேசனை தாக்கியது தோப்புக்காடு பகுதியை சேர்ந்த தமிழரசன் (25), ரஞ்சித் (23) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story