மரங்களை வெட்டி கடத்திய 2 பேர் மீது வழக்கு

மரங்களை வெட்டி கடத்திய 2 பேர் மீது வழக்கு
X
புதுக்கடை
குமரி மாவட்டம் காப்புக்காடு பகுதி கோணத்துவிளையை சேர்ந்தவர் தேவராஜ் (65). கார் டிரைவர். இவரது தோட்டத்தில் உள்ள மரங்கள் அதே பகுதியை சேர்ந்த குணமணி மகன் பிரிங்கோ ஸ்டான்லி வீட்டில் சாய்ந்து நிற்பதால் இரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.        இந்த நிலையில் சம்பவ தினம் பிரிங்கோ ஸ்டான்லி அவரது சகோதரர் பெல்பின்கோ ஸ்டான்லி ஆகியோர் சேர்ந்து தேவ ராஜ் தோட்டத்தில் நின்ற மகாகனி, தேக்கு, ரப்பர் போன்ற மரங்களை வெட்டி டெம்போவில் கடத்தி சென்றுள்ளனர். அதன் மதிப்பு சுமார் ரூ. 23 ஆயிரம் என தெரிய வருகிறது.         இது குறித்து தேவராஜ் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் பிரிங்கோ ஸ்டான்லி, பெல்பின்கோ ஸ்டான்லி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story