சின்னாளபட்டி பேரூர் கழக பிஎல்2, பிஎல்எசி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

சின்னாளபட்டி பேரூர் கழக பிஎல்2, பிஎல்எசி  வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
X
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற வாக்குச்சாவடி முகவர்கள் அயராது உழைக்க வேண்டும்- சின்னாளபட்டி பேரூர் கழக பிஎல்2, பிஎல்எசி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி பேச்சு
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற வாக்குச்சாவடி முகவர்கள், கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அயராது உழைக்க வேண்டும் என்று சின்னாளபட்டி பேரூர் கழகம் சார்பாக ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் நடைபெற்ற பிஎல்2, பிஎல்எசி வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி பேசினார். கிளைக்கழகம் மற்றும் வார்டு செயலாளர் முதல் ஒன்றிய செயலாளர் வரை ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் மாபெரும் வெற்றி பெறலாம் என கூட்டத்தில் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர்காமாட்சி பேசினார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னாளபட்டி பேரூர் கழக தி.மு.க. பிஎல்2, பில்எசி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்களுக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி, ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி ஆகியோர் கலந்துகொண்டனர். சின்னாளபட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத்தலைவர் ஆனந்திபாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சின்னாளபட்டி பேரூர் கழக திமுக பொறுப்பாளர் தி.பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி பேசும்போது, திராவிட மாடல் ஆட்சி நாயகன் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதுபோல வருங்கால தமிழகம் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலன் காக்க இந்தியாவே போற்றும் அளவிற்கு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரத்தை வாட்சப் மற்றும் குறுந்தகவல் மூலம் பரப்பி வருகின்றனர். இதை முறியடிக்கவும், நமது தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரின் சாதனைகளை எடுத்துரைக்கவும் ஐடிவிங்; பொறுப்பாளர்கள் அனுப்பும் தமிழக அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் அன்றாடம் நடைபெறும் தமிழக அரசின் நிகழ்ச்சிகள் மற்றம் நலத்திட்டங்களை நீங்கள் அருகில் உள்ள உங்கள் நண்பர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். வார்டு செயலாளர் முதல் ஒன்றிய செயலாளர் வரை அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் வரும் 2026 தேர்தலில் மாபெரும் வெற்றி பெற முடியும் என்றார். ஆத்தூர் தொகுதியின் கொடை வள்ளலாக செயல்படும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் சாதனை திட்டங்கள் மற்றும் ஆத்தூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் பத்மாவதி ராஜகணேஷ், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய ஐ.டி.விங் பொறுப்பாளர் கணேசன், தனிஸ்லாஸ், முன்னாள் பேரூர் கழக செயலாளர் அறிவழகன், சின்னாளபட்டி பேரூர் கழக திமுக பொறுப்பாளர்கள் தம்பிதுரை, நாககண்ணன், கீர்த்தனா, சோலைராஜீ, ஆர்.ஏ.கிருஷ்ணன், கோபிநாத், குணசேகரன், வேல்முருகன், முத்துவேல் மற்றும் மாணவரணியைச் சேர்ந்த அரவிந்தன், வினோத்ஒச்சப்பன், இளைஞரணியைச் சேர்ந்தஓ.பி.பாரதிராஜா, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ஹேமாதம்பிதுரை, தாமரைச்செல்வி, செல்வி, வேல்விழி, செல்வக்குமாரி, சாந்தி மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள் சந்திரன், ரவிதண்டபாணி, தங்கபாண்டி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story