பேருந்து நிலையம் 2 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது

X

செம்பட்டி பேருந்து நிலையம் ரூ.2கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது-ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு • ஆத்தூர் மற்றும் நிலக்கோட்டை தொகுதி மக்கள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு மனதார பாராட்டு
செம்பட்டி பேருந்து நிலையம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் உத்தரவின் பேரில் ரூ.2கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பெ.திலகவதி தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். செம்பட்டி பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படுவதற்கு ஆத்தூர் மற்றும் நிலக்கோட்டை தொகுதி மக்கள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு மனதார பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப்பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களிடம் ஆத்தூர் சட்;டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீவல்சரகு மற்றும் ஆத்தூர் சட்;டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர், சீவல்சரகு, பாளையங்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்களும், நிலக்கோட்டைசட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பச்சமலையான்கோட்டை மற்றும் ஒட்டுப்பட்டி, காமுபிள்ளைசத்திரம் போன்ற பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, சிவகாசி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், சிவகங்கை ஆகிய ஊர்களில் இருந்து கோவைக்கு வரும் பேருந்துகள் செம்பட்டி வழியாக வந்து சென்றது. இதுபோல கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும் செம்பட்டி வந்து சென்றது. பேருந்து நிலைய வசதி இல்லாததால் பேருந்துகள் அனைத்தும் புறவழிச்சாலை வழியாகவும், மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று விடுவதாகவும் இதனால் செம்பட்டி பேருந்து நிலையத்தை புதுப்பித்து விரிவுபடுத்த வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக சுமார் 2 கோடி மதிப்பில் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குர் பெ.திலகவதி தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆத்தூர் தட்சிணாமூர்த்தி, நிலக்கோட்டை பஞ்சவர்ணம், பத்மாவதி மற்றும் ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் செம்பட்டி பேருந்து நிலையத்தை ஆய்வு செய்ததோடு அங்குள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர். அதன்பின்னர் மதுரையில் இருந்து கோவை நோக்கி செல்லும் பேருந்துகள் வரும் வழி திண்டுக்கல்லில் இருந்து கம்பம் செல்லும் பேருந்து நிலையத்திற்கு வரும் வழி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் ஆக்கிரமிப்பாக இருக்கும் கடைகளை அகற்றவும் உடனடியாக உத்தரவிட்டனர். ஆய்வின்போது நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சௌந்தரபாண்டியன், ஒன்றிய துணைச் செயலாளர் அழகேசன், பொருளாளர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி பொன்னையா, செம்பட்டி கிளைச் செயலாளர் ரவி, பச்சமலையான்கோட்டை ஊராட்சி செயலாளர் ஜெயகணேஷ் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். செம்பட்டி பேருந்து நிலையம் புதுப்பிப்பது குறித்து நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சௌந்தரபாண்டியன் கூறுகையில், வரம் கொடுக்கும் தெய்வம் போல் நாங்கள் கேட்ட உடனே ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐயா ஐ.பெரியசாமி அவர்கள் செம்பட்டி பேருந்து நிலையத்தை புதுப்பிக்க உத்தரவிட்டதோடு சாலைகளையும் புதுப்பிக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் நிலக்கோட்டை மற்றும் ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த மக்கள் பயனடைவார்கள். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு நிலக்கோட்டை தொகுதி பொதுமக்கள் சார்பாக மனதார பாராட்டும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.செம்பட்டி பேருந்து நிலையம் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்த அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு ஆத்தூர் தொகுதி மக்களும், குறிப்பாக சின்னாளபட்டியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் மனதார பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர். 30 வருடங்களுக்கு பிறகு செம்பட்டி பேருந்து நிலையம் ரூ.2கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Next Story