கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை

கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை
X
விருவீடு அருகே கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரில் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறை, மற்றொருவருக்கு 15 ஆண்டுகள் 3 மாதம் சிறை
திண்டுக்கல் மாவட்டம் விருவீடு அருகே சென்மார்பட்டி பகுதியைச் சேர்ந்த வனராஜா(40) என்பவரை கடந்த 2022-ம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக உசிலம்பட்டியை சேர்ந்த ராஜேஷ்(35), நித்யா(33) ஆகிய 2 பேர் அரிவாளால் வெட்டி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் 2 பேரையும் விருவீடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நீதிபதி அவர்கள் ராஜேஷுக்கு 8 ஆண்டுகள் சிறை, 6 ஆயிரம் அபராதமும், நித்யாவிற்கு 15 ஆண்டுகள் சிறை, ரூ.11.500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Next Story