அரக்கோணத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது!

அரக்கோணத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது!
X
வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது!
அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன் தலைமையிலான போலீசார் நேற்று அரக்கோணம் காவனூர் ரோடு தோல் ஷாப் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் வேகமாக திரும்பி சென்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் பகு தியை சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த 21-ந் தேதி அரக்கோணம் மூகாம்பிகை நகர் பகுதியில் அமுதா என்பவரது வீட்டிலும், அவரது வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்த யுவராஜ் என்பவரது வீட்டிலும் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந் தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story