சேலம் அருகே கடைகளில் குட்கா விற்ற 2 பேர் கைது

X
சேலம் கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது குட்கா விற்ற நெய்காரப்பட்டி பகுதியை சேர்ந்த சுப்ரமணி (வயது 65) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதே போன்று இரும்பாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் செம்மன்திட்டு பகுதியில் கடையில் குட்கா விற்ற திருமலைகிரியை சேர்ந்த அகமது (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story

