மாற்றுத்திறனாளிடம் வேலை வாங்கி தருவதாக ரூ. 2 லட்சம் மோசடி

மாற்றுத்திறனாளிடம் வேலை வாங்கி தருவதாக ரூ. 2 லட்சம் மோசடி
X
சேலத்தைச் சேர்ந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை
சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மாற்றுத்திறனாளியிடம் ரூபாய் 2 லட்சம் மோசடி செய்ததாக பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் செந்தூர் அடுத்த கீழராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தசாமி மாற்றுத்திறனாளி ஆன இவர் சேலம் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் நண்பர் மூலம் சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த பெண் பிரமுகர் அறிமுகமானார். துணை முதல்வரின் உதவியாளர் என தெரிவித்த அவர் ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியை பெற்று தருவதாக கூறினார். இதையடுத்து வீட்டை அடமானமாக வைத்து ரூபாய் 2 லட்சம் பணம் கொடுத்தேன். பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் காலதாமதம் செய்து வந்தார். இது தொடர்பாக கேட்டபோது போலியாக பணியானையை அனுப்பி வைத்துவிட்டு தலைமறைவானார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இதன் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பெண் பிரமுகரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story