ராணிப்பேட்டை சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

ராணிப்பேட்டை சந்தையில்  ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
X
சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
ராணிப்பேட்டை ரயில் நிலைய சாலையில் உள்ள வாரச்சந்தை மைதானத்தில் வெள்ளிக்கிழமைதோறும் ஆட்டு சந்தை நடைபெறுகிறது. இதில் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருத்தணி மற்றும் ஆந்திராவின் பல பகுதிகளிலிருந்து விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நடைபெற்ற ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை களைக்கட்டியது. ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் ஆடுகளை வாங்கி செல்ல குவிந்தனர்.ரம்ஜான் பண்டிகை என்பதால் ஆடுகளின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. ஒரு ஜோடி ஆடுகள் ரூ.30,000 முதல் ரூ.70,000 வரை விற்பனையானது. சுமார் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
Next Story