பெரிய சோளிபாளையம் பகுதியில் மின் வாரியம் சார்பில் 2 புதிய மின்மாற்றிகள் அமைப்பு

X

பரமத்தி வேலூர் தாலுகா பெரிய சோளிபாளையம் பகுதியில் மின் வாரியம் சார்பில் 2 புதிய மின்மாற்றிகள் அமைப்பு.
பரமத்தி வேலூர், மார்ச்.29- பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை மின் வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பெரிய சோளிபாளையம் கிராமத்தில் குறைந்த அழுத்த மின்சாரம் தொடர்ந்து இருந்து வந்ததன் காரணமாக அந்த பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பரமத்தி வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வால் ாஜன் தீவிர நடவடிக்கை எடுத்து மின் வாரியத்தால் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பெரியபாளையம் பகுதியில் 2 புதிய மின் மாற்றி நிறுவப்பட்டு அந்த பகுதியில் சீரான மின் சாரம் வழங்கப்பட்டது. 2 புதிய மின் மாற்றி நிறுவப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கபிலர்மலை உதவி செயற் பொறியாளர் ராஜா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரன், பெரிய சோளிபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் பெரியசாமி, மின் வாரிய பணியாளர்கள், ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story