சேலம் வனப்பகுதியில் மது குடித்த 2 பேருக்கு அபராதம்

X

வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
சேலம் வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வன காப்பாளர்கள், குரும்பப்பட்டி காப்புக்காடு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 பேர் அமர்ந்து மது குடித்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்கள் சேலம் அழகாபுரத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 59), பள்ளப்பட்டியை சேர்ந்த சேகர் (60) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Next Story