பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி : ஆட்சியர் தகவல்

X

தூத்துக்குடியில் வருகிற 5ஆம் தேதி (சனிக்கிழமை) 12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள மாணாக்கர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தூத்துக்குடியில் வருகிற 5ஆம் தேதி (சனிக்கிழமை) 12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள மாணாக்கர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில், துாத்துக்குடி மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள மாணாக்கர்களுக்கான ”என் கல்லுரரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி துாத்துக்குடி வட்டத்திலுள்ள சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகின்ற 05.04.2025 ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை முதலாம் கட்ட தொழில் வழிகாட்டு ஆலோசனை முகாம் நடைப்பெற உள்ளது. துாத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் பிற வகுப்பின மாணாக்கர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
Next Story