சேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது

X
சேலம் பள்ளப்பட்டி அங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் லட்சுமிகாந்தன் (வயது 38). வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவருடைய மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து அவர் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் லட்சுமிகாந்தனின் மோட்டார் சைக்கிளை திருடியது ஆத்தூரை சேர்ந்த திருமான் (22), சஞ்சய் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story

