ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை நகராட்சி நிர்வாக அலட்சியப் போக்கால் பழைய பேருந்து நிலையம் சுற்றி கழிவுதேங்கியால் பாதசாரிகள் இருசக்கர வாகனத்தில் ச

X

ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை நகராட்சி நிர்வாக அலட்சியப் போக்கால் பழைய பேருந்து நிலையம் சுற்றி கழிவுதேங்கியால் பாதசாரிகள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பெரும் அவதி*
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை நகராட்சி நிர்வாக அலட்சியப் போக்கால் பழைய பேருந்து நிலையம் சுற்றி கழிவுதேங்கியால் பாதசாரிகள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பெரும் அவதி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக நகரின் முக்கிய வீதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதுடன் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மேலும் நகராட்சிநிர்வாகத்தின் அலட்சிய போக்கால் பழைய பேருந்து நிலையம் முன்பாக மழை நீர் போக வழியில்லாமல் கழிவு நீர் மற்றும் மழை நீரூம் பழைய பேருந்து நிலையம் சுற்றி குளம் போல் மாறியது அந்த பகுதியில் செல்லும் பாதசாரிகள் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் பாதிக்கபட்டனர் மேலும் காந்தி சிலை அருகே பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக பாதாள சாக்கடையிலிருந்து கழிவுகள் வெளியேறி மழை நீருடன் கலந்ததால் பாதாசரிகள் கடும் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் பாதாள சாக்கடை குழாயில் அடிக்கடி ஏற்படும் பழுதுகளை நகராட்சி நிர்வாகம் முறையாக சீரமைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Next Story