புதுகை: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்!

அரசு செய்திகள்
தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி தொடங்கி கடந்த 25ஆம் தேதி முடிவடைந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதியுள்ளனர். அவ்வகையில் புதுக்கோட்டையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கான 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது.
Next Story