இளம் பெண் 2 பிள்ளைகளுடன்  மாயம் 

இளம் பெண் 2 பிள்ளைகளுடன்  மாயம் 
X
ஈத்தாமொழி
குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே வடக்கு வள்ளியாவிளையை சேர்ந்தவர் கிஷோர் குமார். இவரது மனைவி சத்யா (35) இந்த தம்பதிக்கு 11, 7 வயதில் இரு பிள்ளைகள் உள்ளனர். சத்யா உடல் நலக்குறைவு காரணமாக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு தனது 2 பிள்ளைகளுடன் சென்றார்.        ஆனால் அவர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சென்று விட்டு பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கணவர் கிஷோர் குமார் ஈத்த மொழி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யாவையும் பிள்ளைகளையும் தேடி வருகின்றனர்.
Next Story