காடையாம்பட்டி அருகே காட்டு பூனையை வேட்டையாடி இறைச்சியை பங்கு வைத்த 2 பேர் கைது

X
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த டேனிஷ்பேட்டை வனத்துறை அலுவலர் தங்கராஜ் தலைமையில் வனத்துறையினர் காடையாம்பட்டி அருகே பிளாட் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு காட்டு பூனை இறைச்சியை 3 பேர் பிரித்துக் கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது ஒருவர் தப்பி சென்றார். மற்ற 2 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், பண்ணப்பட்டி காங்கேயனூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது30), பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா முத்தம்பட்டி கிட்டம்பட்டி தண்டா பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (30) என்பதும் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய நாச்சினம்பட்டி பகுதியை சேர்ந்த அருண் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
Next Story

